Tharshan
தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் மூலமாக பிரபலமான தர்ஷனுக்கும் அவரது காதலி சனம் ஷெட்டிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை மீடியாக்கு வந்து விட்டதாகவும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இருவரும் பேட்டிகளில் மாறி மாறி குற்றம் சாட்டி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் பெண்களுக்கு எதிரான குற்றம், பணம் வாங்கி கொண்டு ஏமாற்றுதல் போன்ற செயல்களால் தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனால் தர்ஷன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், இந்த பிரச்சனையில் இருந்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.