Web Ad 2

சமுத்திரக்கனி-கவுதம் மேனன் நடிக்கும் படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர்..

Web Ads

இயக்குநரும் நடிகர்களுமான சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘கார்மேனி செல்வம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர்.

நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகும் இதை, பாத்வே புரொடக்சன்ஸ் சார்பில், அருண் ரங்கராஜூலு தயாரிக்கிறார். யுவராஜ் தக் ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் ராம் சக்ரி தெரிவிக்கையில், ‘அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் சமுத்திரக்கனிக்குத் திடீரென்று பணத்தின் மீது ஆசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும்போது, அவருடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து நகைச்சுவை ததும்ப இப்படத்தை உருவாக்கியுள்ளோம்’ என்றார்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வெளியாகி வரவேற்பு பெற்றது. அவ்வகையில் இந்த படமும் அமையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

samuthirakani carmeni selvam
samuthirakani carmeni selvam