Sameer Sharma Commits Suicide
Sameer Sharma Commits Suicide

Sameer Sharma Commits Suicide : பாலிவுட்டின் பிரபல ஹிந்தி டிவி சீரியல் நடிகரானார் சமீர் ஷர்மா. இவர் Yeh Rishey Hain Pyaar Ke என்ற பிரபலமான சீரியல் ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

மேலும் சமீர் ஷர்மா பல்வேறு சின்னதிரை சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு பரிச்சயம் ஆனார்.இந்த நிலையில்தான் சமீர் சர்மா தனது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சமீர் ஷர்மா வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே, அந்த குடியிருப்பு பகுதியின் காவலாளி ஜன்னல் வழியே பார்த்தபோது அவர் சமையலறையில் தூக்கில் தொங்குவது தெரியவரவே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதில் பரிதாபம் என்னவென்றால், அவர் மரணமடைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவின் துயரத்திலிருந்து மீளாத பாலிவுட் தற்பொழுது இவரது மரணத்தால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.