நடிகை சமந்தா குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் குஷி என்ற தலைப்பில் உருவாகி வந்த தெலுங்கு திரைப்படத்தில் நடித்துவந்த சமந்தா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சிவா நிர்வாண இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வந்த குஷி திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பின் போது மயோசைட்டிஸ் நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அதன் பிறகு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்வது ஓய்வு எடுப்பது என தனக்கான நேரங்களை ஒதுக்கி வந்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை தேறி இருக்கும் சமந்தா தற்போது பழையபடி புத்துணர்ச்சியாக தனது பணிகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பாதியில் விடுபட்டிருந்த குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகை சமந்தா மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.