சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..

Web Ads

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது.

அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ‘ரக்த்’ பிரம்மாண்ட் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது.

அதற்கேற்ப சமந்தா, தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இயக்குநர் ராஜ் நிடிமொருவை உடன் அழைத்துச் செல்கிறார். வெளிநாடுகளுக்கு சென்றாலும் ராஜுடன் தான் செல்கிறார். அவ்வாறு பயணம் செய்யும்போது ராஜுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்ததை வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமந்தா எப்பொழுது ராஜுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டாலும், ரசிகர்கள் உடனே ராஜின் மனைவி சியாமளியின் இன்ஸ்டா பக்கத்திற்கும் சென்று அவர் கர்மா பற்றி ஏதாவது தெரிவித்துள்ளாரா என்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ராஜும், சியாமளியும் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டார்களா என்பது தெரியவில்லை.

சியாமளியின் இன்ஸ்டா பக்கத்தில் திருமணப் புகைப்படங்கள், ராஜின் புகைப்படங்கள் அனைத்தும் அப்படியே இருக்கிறது. விவாகரத்து நடந்திருந்தால் அவர் இந்நேரம் ராஜின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியிருப்பார்.

இந்நிலையில், தற்போது ராஜ் நிடிமொருவுடன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அதில் ஒரு புகைப்படத்தில் ராஜும், சமந்தாவும் மிகவும் நெருக்கமாக சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அதைப் பார்த்த ரசிகர்கள், ‘ராஜ் தான் என் காதலர் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவே இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விரைவில் அவரே திருமணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார்’ என்கிறார்கள். இந்நிலையில் பாலிவுட்டில் கவனம் செலுத்த விரும்பும் சமந்தா, அதற்கு வசதியாக மும்பையில் ரூ.15 கோடிக்கு அபார்ட்மென்ட்டும் வாங்கியுள்ளார்.

samantha and raj nidimoru latest picture goes viral
samantha and raj nidimoru latest picture goes viral