விஜய் டிவி சக்திவேல் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகும் குழந்தையின் நட்சத்திரம்.. முழு விவரம் இதோ.!!
சக்திவேல் சீரியலில் நடிக்கப் போகும் பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

sakthivel serial in new entry for child artist
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சக்திவேல். இந்த சீரியலில் பிரவீன் மற்றும் அஞ்சலி இருவரும் ஹீரோ ஹீரோயின் ஆக நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த சீரியலில் சிவபதிக்கு தெரியாமல் சக்தி ஜோதியை பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக அவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தார். இந்த விஷயம் சிவபதிக்கு தெரிந்து ஜோதியை வீட்டை விட்டு போக சொல்லுகிறார்.
இதில் சக்திக்கும் பங்கு இருப்பதை அறிந்து கொண்டு இரண்டு பேரையும் சேர்த்து வெளியில் போக சொல்லுகிறார். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது செல்லமா சீரியலில் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரம் மீனாட்சி இந்த சீரியலிலும் புதியதாக என்ட்ரி கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sakthivel serial in new entry for child artist