Web Ads

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் இணைகிறார் சாய் பல்லவி?

Web Ad 2

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க, பூஜையும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால், அடுத்தாண்டு கண்டிப்பாக இப்படம் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரஜினியை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

விரைவில் இதன் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இத்தகவலை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது. இதனை ரஜினியின் பிறந்த நாளில் எதிர்பார்க்கலாமோ பார்க்கலாம்.

இதனைத்தொடர்ந்து ‘தலைவர் 173’ படத்தில் சாய் பல்லவி மிக முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். தற்போது சாய் பல்லவியுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் தனது அசாத்திய நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார் சாய் பல்லவி. அப்படத்தையும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரித்திருந்தார்.

தற்போது ‘தலைவர்173’ படத்தையும் கமல் தயாரிக்கும் நிலையில் இந்தப் படத்திலும் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் நடிகர் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது.

சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் STR-49 என்ற திரைப்படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தில் சிம்பு மாணவர் மற்றும் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருந்தார். அந்த படத்தின் கதையையே தற்போது ரஜினிக்காக சில மாறுதல்கள் செய்து, அவரிடம் ராம்குமார் சொல்லியிருப்பதாக பேசப்படுகிறது. அதில், சிம்பு மாணவராக நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இதில் ரஜினி மாணவராக இல்லாமல் கல்லூரிப் பேராசிரியராக மட்டும் நடிப்பதாக கதையை ராம்குமார் மாற்றியிருக்கிறார் என கூறப்படுகிறது.

மறுபக்கம் இது சிம்புவிற்காக எழுதப்பட்ட கதையல்ல, ரஜினிக்காக புதிதாக உருவாக்கப்பட்ட கதை. சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்த வருடம் கண்டிப்பாக படமெடுப்பார் என்பதால், அந்தக் கதையை ரஜினிக்காக பயன்படுத்தமாட்டார் என நம்பிக்கையுடன் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

sai pallavi in talks for rajinikanth in thalaivar 173 movie
sai pallavi in talks for rajinikanth in thalaivar 173 movie