Sai Pallavi Next : தனுஷுடன் மாரி 2 படம் வெளியாகியுள்ளதை அடுத்து விஜய் படத்தில் சர்ச்சையான வேடத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர் சாய் பல்லவி.
அதன் பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கரு படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ள மாரி 2 படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் இயக்க உள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலாவாக சர்ச்சை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையான சசிகலா வேடத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருவது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.