Sabarimala Temple Ladies Entry
Sabarimala Temple Ladies Entry

Sabarimala Temple Ladies Entry – திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்வது தொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில், பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்றளவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவில் செல்ல வேண்டும் என வலியுறுத்தி ” பெண்கள் சுவர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

‘இந்நிகழ்ச்சியில் வரும் 2019 ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று காசிகோடு முதல் திருவனந்தபுரம் வரை 10 லட்சம் பெண்கள் சுவர்போன்று நின்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்’.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே. சுரேந்திரன் கூறுகையில், “பெண்கள் சுவர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு

பெண்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தால் அந்த நிகழ்ச்சி தடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி உட்பட, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.