Saani Kagitham First Look : தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை முத்திரை பதித்த இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். தனது இயக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு பல்முக படத்தை அள்ளித்தந்த இவர், தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளார்.

இயக்குனராக படத்தை இயக்கியுள்ள செல்வராகவன் தற்போது நடிகராக தனது முதல் படமான ‘சாணி காயிதம்’ படத்தின் மூலம் புதிய அவதானம் எடுத்துள்ளார்.

அஜித்தைப் போல சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கொல மாஸாக விஜய் சேதுபதி – வெளியான புகைப்படம்

இத்தனை கால சினிமா வரலாற்றில் இவர் இயக்கிய எந்த படத்திலும் நடித்ததில்லை. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாணி காயிதம் என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை ஸ்கிரீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தற்போது ‘சாணி காயிதம்’ படத்தின் மிரட்டும் விதத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சண்டைக்காட்சிகள் மிகுந்த போர்க்களம் ஆகவே இந்த கதைக்களமாக இப்படம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.