Vijay Sethupathi in Salt and Pepper Look

அஜித்தைப் போல சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Salt and Pepper Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஸ்டன்ட் மாஸ்டராக வேண்டும் என்ற ஆசையில் திரையுலகிற்குள் நுழைந்த இவர் இன்று முக்கிய நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

வருடத்திற்கு பல படங்களை கொடுத்து வரும் ஒரே ஹீரோவாக விஜய்சேதுபதி வலம் வருகிறார். நடித்தால் ஹீரோ மட்டும்தான் என்றில்லாமல் வில்லனாகவும் பல படங்களில் மிரட்ட தொடங்கியுள்ளார்.

தமிழ் தாண்டி தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடித்து வரும் இந்தி படத்தின் படப்பிடிப்புகள் துருக்கியில் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்தை போல கொல மாசாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/vjs_fan/status/1293048454936231937?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.