Web Ad 2

சேப்பாக்கத்தில் களைகட்டிய ‘ரோர் 26’ – பத்ரி வெங்கடேஷின் மாபெரும் மேடை நிகழ்ச்சி!

Web Ads

‘பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியை சிறப்பாக இயக்கி கவனம் பெற்றுள்ளார்.

இந்த விழாவில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களுடன், நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்தார்.

நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி, அனிருத் ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கி, ரசிகர்களை முழுவதும் ஈர்த்தனர்.

சைமா (SIIMA), மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற பிரபலமான மேடை நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவத்தை முழுமையாக பயன்படுத்திய பத்ரி வெங்கடேஷ், ‘ரோர் 26’ ஐ மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளார்.

மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.