சொர்க்க வாசல் திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸ்; தேதி அறிவிப்பு
ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:
ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருந்தார்.
படத்தில், ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்படுகிறார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சொர்க்கவாசல்.
இப்படத்தின் கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜி, செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலைக்கு செல்கிறார். அங்கு, ‘தாதா’ சிகா என்ற செல்வராகவன், அந்த சிறைச்சாலையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அவனின் அட்டகாசம் தாங்க முடியாமல், ஜெயிலர்கள் சிகாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆர்.ஜே. பாலாஜிக்கு, தான் ஜெயிலுக்கு வர முக்கிய காரணமே செல்வராகவன் என தெரிய வருகிறது. ஆனால், ஆர்.ஜே. பாலாஜியால், செல்வராகவனை எதிர்க்க முடியாமல் தவிக்கிறான்.
இந்நிலையில், சிறையில் ஒருநாள் கலவரம் வெடிக்க, அந்த கலவரத்தில் ஒரு கொலை நடக்கிறது. இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆர்.ஜே.பாலாஜி முதன் முறையாக இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வசூலைப் பெற்ற நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
எப்படியோ, மார்கழியில் திறக்கப்படுகிறது ‘சொர்க்கவாசல்’. ஓடிடி.யிலும் திறக்கப்படுகிறது சொர்க்கவாசல்.!