மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார் தனுஷ்?

Web Ads

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை’ என பாடிய நடிகர் சந்திரபாபுவை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, விஷயத்திற்கு வருவோம்..

இந்திய அளவில் பயோபிக் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘நடிகையர் திலகம்’ (சாவித்திரி) மற்றும் தலைவி (ஜெ.ஜெயலலிதா) ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன.

இந்நிலையில், இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக, ‘இசைஞானி’ இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் வாழ்வியல் குறித்த முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய பயோபிக்காக தனுஷ் நடிப்பில் ‘இளையராஜா’ படம் உருவாவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுவதாக இருந்தது. ஆனால், படம் கைவிடப்பட்டது.

மேலும், பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் குறித்த பயோபிக்கும் எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், இவை அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.

இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ், மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது சம்பந்தமாக சந்திரபாபுவின் உறவினர்களிடம் பேசி, முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலத்தால் அழியாத நகைச்சுவை கலைஞர் சந்திரபாபுவை, இன்றைய எந்திர உலகம் தெரிந்து வியக்கட்டும்.!

actor dhanush and chandrababu images 1200