ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ பட பாடல் அப்டேட்; படத்துக்கான முன்பதிவும் தொடங்கியது..
ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்..
ஆர்.ஆர்.ஆர் படத்துக்குப் பிறகு, இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். இந்நிலையில், இவரது நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை ஷங்கர் இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த படம் சுமார் 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து, படம் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப்போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது.
ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் சிங்கிள் ‘ஜரகண்டி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஷங்கர் படங்களுக்கே உரிய பிரம்மாண்ட கலர்புல் செட் பின்னணியில், நூற்றுக்கணக்கான குரூப் டான்சர்கள் சூழ பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவானதாக கூறப்பட்டது. டலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்டதுமே மனதில் ஒட்டிக் கொள்ளும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘அடுத்த சிங்கிள் பாடல் சவுண்ட் சேஞ்சராக இருக்கும்’ என இசையமைப்பாளர் தமன் அப்டேட் கொடுத்துள்ளார். இந்நிலையில், ரிலீஸுக்கு 25 நாட்களுக்கு முன்னதாகவே, தற்போது வெளிநாடுகளில் படத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியன்-2 படம் தந்த மனச்சோர்வை, கேம் சேஞ்சர் படம் வந்து நீக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.!