Rio Raj Tweet About His Daughter
Rio Raj Tweet About His Daughter

மகளின் பாதத்தை பதிவிட்டு உருக்கமாக பேசியுள்ளார் விஜய் டிவி ரியோ.

Rio Raj Tweet About His Daughter : தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ரியோ ராஜ்.

அதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஐக்கியமாகி தொகுப்பாளராகவும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகராகவும் வலம் வந்தார்.

குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆணா? பெண்ணா? என்பதை சூசகமாக அறிவித்த ஆலியா மானசா – அவர் வெளியிட்ட வீடியோவை நீங்களே பாருங்க.!

விஜய் டிவியில் பயணித்து கொண்டிருக்கும் போதே வெள்ளித்திரையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு மேலும் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கும் இவருடைய மனைவி ஸ்ருதிக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது. தன்னுடைய பெண் குழந்தையின் பாத புகைப்படத்தை வெளியிட்டு அமைதியா இரு செல்லமே.. நீ உயரே பறக்க பிறந்தவள். அதற்கு முன் தற்போது அமைதியாக இரு என்று பதிவிட்டுள்ளார்.

வாவ்.. மா.க.ப-விற்கு இவ்வளவு அழகான மகளும் மகனுமா? – முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.!

மேலும் அந்த பதிவில் தன்னுடைய மனைவிக்கும் ஐ லவ் யூ என கூறியுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.