இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வலிமை மோஷன் போஸ்டர் சாதனை படைத்துள்ளது.

Record of Valimai Motion Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை.

இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்.‌. என்ன குழந்தை தெரியுமா? அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஹீமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ராஜப்பா, யோகி பாபு, விஜய் டிவி புகழ் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இரண்டு வருட காத்திருப்பிற்குப் பிறகு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மோஷன் போஸ்டர் இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட மோஷன் போஸ்டர் என்பதில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

2 வருஷம் தவம் இது.., வலிமை Motion Poster எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.