இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Blessed With Boy Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய திறமை மற்றும் விடா முயற்சியால் இன்று திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.

தனது பேத்தியை கடத்திய 70 வயது பாட்டி ; ஏனென்றால்..

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் தொடர்ந்து நல்ல படங்களை தயாரித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே ஆராதனா என ஒரு மகள் இருந்த நிலையில் இவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதுபற்றி சிவகார்த்திகேயனும் அவருடைய மனைவியோ வாய்திறந்து எதையும் கூறவில்லை.

இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்.‌. என்ன குழந்தை தெரியுமா? அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு

இப்படியான நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மகன் பிறந்து இருப்பதாக சமூகவலைதள பக்கத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில் 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊 என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Valimai படத்தில் Vignesh Shivan-க்கு கிடைத்த வாய்ப்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!