Reason for Actor Vivekh Death

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தேசிய குழு ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Reason for Actor Vivekh Death : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். நடிகராக மட்டுமல்லாமல் சமூக சிந்தனை கொண்ட இவர் தொடர்ந்து அப்துல் கலாமின் கனவு படி இந்தியாவை பசுமையானதாக மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். பல்வேறு இடங்களில் இவர் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

நடிப்பிலும் உச்சம் பெற்ற நடிகர் விவேக் மக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD

தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மாதிரி நாள் இவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு அப்போதே தடுப்பூசி காரணமில்லை என மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து ஆராய்ந்த தேசிய குழு நடிகர் விவேக்கின் மரணம் தற்செயலானது. அவருடைய மரணத்திற்கு கொரோனா தடுப்பு ஊசிகள் எந்தவித சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.