லீக்கான ஒரு புகைப்படத்தின் காரணமாக மாநாடு படத்தை வேண்டாம் என தூக்கிப் போட்டுள்ளார் தளபதி விஜய்.

Reason Behind Vijay Rejects Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்தாராம்.

லீக்கான புகைப்படம்.. மாநாடு படத்தில் வேண்டாம் என தூக்கி போட்ட தளபதி - இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா??

மாநாடு படத்தின் கதையை எழுதிய கையோடு அவர் விஜய் சந்தித்து கதை கூற படத்தின் கதை தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்துப் போய் உள்ளது. இந்த நேரத்தில் தளபதி விஜய் சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி படத்தின் போது வெங்கட் பிரபு மற்றும் அவரது நண்பர்களை அழைத்து பார்ட்டி வைத்துள்ளார்.

அப்போது வெங்கட்பிரபுவின் நண்பர்கள் இருவர் தளபதி விஜய் வெங்கட் பிரபுவுடன் அமர்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் தீயாக வைரலாகி விஜய் பற்றி மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக கடுப்பான தளபதி விஜய் மாநாடு படமே வேண்டாம் என்று தூக்கி போட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவுகிறது.

லீக்கான புகைப்படம்.. மாநாடு படத்தில் வேண்டாம் என தூக்கி போட்ட தளபதி - இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா??
சாலை விபத்து : பிரபல கிரிக்கெட் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

ஒருவேளை மாநாடு திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை எங்களோட ஷேர் பண்ணுங்க.

மேடையில் திடீரென தேம்பி அழுத Bachelor பட நாயகி Divya BHarathi | Bachelor Press Meet