நான் யார் என்று என்னை உணர வைத்தவர் கெனிஷா: ரவிமோகன் பெருமிதம்..

Web Ads

ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவி மோகன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘இந்த விழா நடைபெறுவதற்கு முழு காரணம் கெனிஷா மட்டுமே. இதை முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே அவர் செய்தார். எனக்கு யாரும் அப்படி செய்ததே கிடையாது. இவ்வளவு பேர் வருவார்கள் என்றும் எனக்கு தெரியாது.

ரவிமோகன் ஸ்டுடியாஸ் நிறுவனத்தின் பார்ட்னராகவும் அவர் இருக்கிறார். ஒரு மனிதன் வாழ்க்கையில் ஓரிடத்தில் தடுமாறி நிற்கும்போது கடவுள் அப்போது ஒரு விஷயத்தை அவனுக்கு அனுப்புவார். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வாகனமாக இருக்கலாம். அப்படி எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா.

நான் யார் என்று என்னை உணர வைத்தது அவர்தான். இதுபோன்ற ஒருவர் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என ரவிமோகன் தெரிவித்தார்.

ravimohan shares about keneeshaa francis
ravimohan shares about keneeshaa francis