விஜய் தேவரகொண்டா உடன் இணைத்து உடற்பயிற்சி செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா.

Rashmika With Vijay Devarakonda : தெலுங்கு திரையுலகின் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவர் கொண்டா. இந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

ஒரே ஜிம்மில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா - மீண்டும் காதலா? வைரலாகும் புகைப்படங்கள்

இவரும் ராஷ்மிகா மந்தனாயும் இணைந்து நடித்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றாற்போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றிய புகைப்படங்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையில் இருவருக்கும் இடையே காதல் இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.