டிஃபரென்ட் லுக்கில் வெரைட்டியாக போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகாந்தன். தெலுங்கு துறையில் பிரபலமான இவர் தமிழில் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவருக்கும் பரிசயமானவர்.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான ஆடைகளில் வித்தியாசமாக எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் டிஃபரண்டான லுக்கில் விதவிதமாக போஸ்களில் எடுத்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.