ராஷ்மிகா டைரக்டர் ஷ்ரோப் உடன் ஜோடி சேர்ந்துள்ளதாக வதந்தி பரவி உள்ளது. அது உண்மைதான் என்று ராஷ்மிகா அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தற்போது ராஷ்மிகா மந்தனா வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜயின் “வாரிசு” திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது ” மிஷன் மஞ்சு” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் களம் இறங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவை குறித்து வதந்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது ராஷ்மிகா நடிகர் டைகர் ஷ்ரோப் உடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார் என்ற வதந்தி தீவிரமாக பரவி வருகிறது.

அதனை உறுதி செய்யும் விதமாக அந்த வதந்தி உண்மைதான் என்று குறிப்பிட்டு டைகர் ஷ்ரோப் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் ராஷ்மிகா மந்தனா அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.