Rashmika Finished Dubbing : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Rashmika Finished Dubbing :

இப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழிக்கு நடிகை ராஷ்மிகா சொந்த குரலில் டப்பிங் கொடுத்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

உடல்நிலை சரியில்லைன்னு சொன்னாங்க.. விளையாடிட்டு இருக்காரு – வைரலாகும் மணிரத்னத்தின் புகைப்படங்கள்!

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இணைவதாலே இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழிக்கு நடிகை ராஷ்மிகா சொந்த குரலில் டப்பிங் கொடுத்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ளது குற்ப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.