ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகின்றது. இப்போட்டியின் தொடக்க காலத்தில் இருந்து இதுவரை நடக்காத ஒரு மாற்றம் இந்த முறை நடந்து இருக்கிறது.
அது என்ன என்றால் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 7 அணிகள் இந்த சீசனில் இடம் பிடித்துள்ளனர். எனவே இந்த முறை மொத்தம் 37 அணிகளுடன் போட்டி தொடங்குகிறது .
புதிதாக சேர்க்க பட்ட அணிகள் முன்னதாக நடந்து முடிந்த விஜய் ஹஸாரே போட்டியிலும் பங்கேற்றவர்கள். இருந்தும் இந்த ரஞ்சி போட்டி அந்த அணிகளுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் இந்த சீசனில் அணிகள் மற்றும் போட்டிகள் அதிகம் என்பதால் மிக அதிக அளவிலான அதாவது 50-க்கும் அதிகமான மைதானங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான வேலையில் பிசிசிஐ நிர்வாகம் மேற்கொண்டுள்ளது .
இதற்கிடையில் அணியின் விவரகள் வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் அதிக அணிகள் உள்ளதால் குரூப் ஏ , பி மற்றும் சி ஆகிய பிரிவுகளாக பிரிந்து உள்ளது. இதில் குறிப்பிட தக்க நட்சத்திர வீரர்களான புஜாரா, அஷ்வின், முரளி விஜய் மற்றும் ப்ரித்வி ஷா ஆகிறோர் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றவர்கள்.
புஜாரா சௌராஷ்டிரா அணியின் , முரளி விஜய் மற்றும் அஸ்வின் தமிழ்நாட்டின் முதல் போட்டிகளில் பங்குபெறுகின்றனர்.
கூடுதலாக சேர்க்கப்பட்ட அணியின் விவரம் :
மணிப்பூர்
அருணாசல பிரதேசம்
உத்தரகண்ட்
சிக்கிம்
நாகலாந்து
மேகாலயம்
பிகார்.
புதுச்சேரி.
மேலும்  ப்ரித்வி ஷா ரயில்வேக்கு எதிரான முதல் போட்டியில்  மும்பை அணியில் பங்கேற்கவில்லை