Ramya Pandian Video After Bigg Boss

செண்டை மேளம் கொட்ட கேக் வெட்டி ரம்யா பாண்டியன் வரவேற்றுள்ளனர் அவரது குடும்பத்தார்.

Ramya Pandian Video After Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். வெள்ளித்திரையில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் கலவையான விமர்சனங்களை மக்கள் மத்தியில் பெற்றார். 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது ரன்னராக வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவரை குடும்பத்தார் செண்டை மேளம் கொட்ட உற்சாகத்துடன் வரவேற்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ