கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Ramya Krishnan Will Host BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் அடுத்த இரு வாரங்களுக்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் உருவானது.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!

அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வெளியானது. அதன் பிறகு விஜய் சேதுபதி, சூர்யா, சிம்பு என பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. மேலும் கமலே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொகுத்து வழங்கப் போகிறார் எனவும் சொல்லப்பட்டது.

ரொம்ப ஒரு இயல்பான நடிகர் Durai Sudhakar – புகழ்ந்து தள்ளிய Blue Sattai Maran | Anti Indian

இப்படியான நிலையில் தற்போது கமலுக்கு பதிலாக அடுத்த இருவாரங்களுக்கு பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகிறார் என லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

உண்மையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.