கொளுத்துற வெயிலுல இதுதான் சுகமா இருக்கு என்பது போல நீச்சல் குளத்திலிருந்து ஜில்லுன்னு போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
Ramya Krishnan Swimming Pool Photos : தமிழ் சினிமாவில் 90 முதல் நாயகி, வில்லி, குத்து டான்ஸர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் பிரபல தொலைக்காட்சியில் தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் தற்போதைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி உள்ளிட்ட படங்களில் ரம்யா கிருஷ்ணாவின நடிப்பு பெரிதும் பாராட்டும் வகையில் இருந்தது. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையல, அப்படியே தான் இருக்கு என பேசுவார். இந்த டயலாக்குக்கு ஏற்றார்போல இன்னமும் அப்படியே இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
அதனை இன்னும் உறுதி செய்யும் வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து ஜில்லுனு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணன் அழகை வர்ணித்து வருகின்றனர்.