ப்ரமோஷனுக்காக ரெண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பதாக பிக் பாஸ் போட்டியாளர் ராம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு ரகமாக இருந்து வருகின்றனர். அசல் கோளாறு பெண்களை தடவி பேசி தொடர் சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.

மேலும் ராபர்ட் மாஸ்டர் தான் ஒரு சிங்கிள் என சொல்லிவிட்டு 22 வயதில் ஒரு பெண்ணை காதலிப்பதாக போட்டியாளர்களிடம் கூறுகிறார். இதெல்லாம் போக இன்னொரு போட்டியாளர் தன்னை பற்றி நல்லபடியாக பேச ப்ரொமோஷனுக்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படியாக ராம் ராமசாமி தான் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் இவர் இப்படி ஓப்பனாக பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ப்ரொமோஷன் செய்து ஓட்டுக்களை பெற்றால் அப்போ மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன பயன்? என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக ஒளிபரப்பான சீசன்களிலும் போட்டியாளர்கள் இப்படி ப்ரமோஷன் செய்து கொண்டார்களா என சந்தேகம் எழுவதாக கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.