‘கூலி’ படத்தில் என் போர்ஷன்ஸ்: ரஜினி வெளியிட்ட அப்டேட்
சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் 700 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ரஜினி. ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பின்னர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.
இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது ‘கூலி’ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில், ‘காவாலா’ ஹாட் ஸாங் போல, பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடுகிறார்.
தலைவரின் ‘கூலி’ படம் 1000 கோடி வசூலை பெற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இதுவரை தமிழில் எந்த ஒரு படமும் 1000 கோடி வசூலைப் பெறவில்லை என்பதால், அந்த சாதனையை ‘கூலி’ நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ‘கூலி’ திரைப்படத்தின் 45 நிமிட காட்சிகளைப் பார்த்தேன். இப்படம் ரசிகர்களை மிகவும் கவரும்.1000 கோடி வசூலை குவிக்கும்’ என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினி கூலி படத்தை பற்றி முக்கியமான ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் இன்று கூறியுள்ளார். இதன் மூலம் படத்தில் அவரின் போர்ஷன்ஸ் முடிவடைந்ததாக தெரிகின்றது. இனி, ஆகஸ்டில் இப்படத்தை எதிர்பார்ப்போம்.