செம மாஸா தெறிக்குது டீசர்: விஜய் பட சாதனையை முறியடித்தது ‘குட் பேட் அக்லி’
அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது ‘தல’ படம். இது பற்றிய தகவல் பார்ப்போம்..
‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று, வசூலிலும் திருப்தியற்ற நிலையில் ஓடிடி.யில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த’குட் பேட் அக்லீ’ படத்தின் டீசர் வெளியாகி செம வைரலாய் தெறித்து வருகிறது. அஜித் பல விதமான ‘மாஸ்’ கெட்டப்புகளில் தோன்றி மிரள வைத்துள்ளார். முன்னதாக அஜித் நடித்து ரசிகர்கள் கொண்டாடிய படங்களின் கெட்டப்புகளில் வருகிறார். அவ்வகையில் இப்படம் குறிப்பாக முழுக்க முழுக்க ‘தல’ ஃபேன்ஸ்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்டாக ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவிஸ் தயாரித்துள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, திரிஷா அஜித்தை விடாது ஜோடியாகி உள்ளார்.
மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், உள்பட பலர் நடித்துள்ளனர். அஜித்தின் 63-வது படமாக வெளியாகவிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 260 கோடி என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வெளியான இப்பட டீசரை 15 மணி நேரத்தில் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ பட டீசர், 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதே சாதனையாக இருந்தது.
இதனை ‘குட் பேட் அக்லீ’ முறியடித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் மேலும் தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.