Web Ads

விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் நடிக்கும் LIC படத்தின் கதை என்ன தெரியுமா?

‘எல்ஐசி’ படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்..

அஷ்வத் இயக்கத்தில், பிரதீப் நடித்து வெளியான ‘டிராகன்’ படம் விமர்சனங்களாலும் வசூலாலும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு, கௌரி கிஷான், மிஷ்கின், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

நயன்தாராவின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. அனிருத் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை குறித்து கூறப்படுவதாவது: அதாவது, தனது காதலுக்காக மொபைல் கேஜெட் மூலமாக 2035 வரை பயணிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய சம்பவங்கள் தான் இப்படம்.

முன்னதாக, விஷாலில் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ படம் டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வந்தது. இந்தப் படமும் அதே போன்ற கதைக்கருவை தழுவி, வேறு கோணத்தில் காதல் மற்றும் நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

எப்படியோ, காதல்கதை பற்றிய படமாக இருந்தாலும், அதில் எண்ணற்ற நிகழ்வுகள் வித்தியாசப்படுத்திக் காட்டும். இதில், விக்கி படம் எப்டின்னு பார்க்கலாம்.