அரசியல் வியூகத்திற்கு ஹிந்தி தெரிந்தவர் வேணுமா? வாட் ப்ரோ: விஜய்க்கு சரத்குமார் சூடான கேள்வி
அரசியலில் நிரந்தர நண்பர்கள்- நிரந்தர எதிரிகள் யாருமில்லை என்பது தெரிந்தது தானே. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பேச்சுக்கு, ‘நாட்டாமை’ கொடுத்துள்ள பதிலடி பார்ப்போம்..
‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் பேசியது விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காக்கா – கழுகு சண்டையை பற்ற வைத்தது.
இந்நிலையில்- தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சரத்குமார் களத்தில் இறங்கி விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசும்போது, ‘மும்மொழிக் கல்வியை பொறுத்தவரையில் மத்திய அரசும் மாநில அரசும் ஹாஷ்டேக் போட்டு எல்கேஜி பசங்க போல விளையாடுறாங்க, அங்க நம்ம பசங்க ஒரு ஹாஷ்டேக் போட்டு சம்பவம் செஞ்சாங்க’ என்றார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு சரத்குமார் கூறும்போது, ‘சினிமாவில் சம்பவம் செய்தார்கள் என்றால், படத்தில் யாரையாவது கொன்றார்கள் என அர்த்தம். என்னடா சம்பவம் செஞ்சாங்க?
விஜய் எதையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
அன்புச் சகோதரர் விஜய் அவர்கள் ரொம்பவே பாப்புலரான நடிகர். பிரசாந்த் கிஷோர் இந்தி தெரியாத ஒருத்தர் இல்ல. உனக்கு வந்து அவர் அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து, உனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமா டேய்.., எங்கடா இருக்கீங்க நீங்களாம்? யாருகிட்டடா பிராடுத்தனம் பண்றீங்க? வாட் ப்ரோ.. வொய் ப்ரோ..
சொந்த தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர், விஜய்யை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதை பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்ததுபோல, விஜய் கட்சியை ஜெயிக்க வைப்பாரா? வரும் தேர்தலில் அதையும் பார்த்துவிடுவோம் என சரத்குமார் சீற்றமாக கூறினார். விஜய் பேச்சுக்கு, சரத்குமார் ஒருமையில் பேசி கொடுத்த பதிலடி தற்போது வைரலாகி வருகிறது.
