அயோத்தி திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டு இருக்கும் ரஜினியின் வாழ்த்து பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது சக நடிகர்களின் திரைப்படங்களையும் தவறாமல் பாராட்டி வருகிறார்.

அந்த வகையில் விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த ‘அயோத்தி’ திரைப்படத்தை பாராட்டி வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம் அயோத்தி. முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!’ என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.