mani rathnam
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் வாய் திறக்காமல் இருப்பது பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Rajinikanth silence on manirathnam issue – கடந்த ஜுலை மாதம் இயக்குனர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 49 ஆளுமைகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதில், வட இந்தியாவில் நடக்கும் குழு வன்முறைகள் குறித்து பேசியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து பீகார் முசாபர் நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் 49 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை செய்ய உத்தரவிட்டார். அதேபோல தற்போது எப்.ஐ.ஆரும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதிலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின், தொல். திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகரும், அரசியலுக்கு வரப்போவதாய் அறிவித்துள்ளவருமான ரஜினி இதுபற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. 1995ம் ஆண்டு பாஷா பட விழாவில் மணிரத்னம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக அப்போதையை முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் ரஜினி. ஆனால், தற்போது மணிரத்னம் உள்ளிட்ட பலர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். இத்தனைக்கும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலரும் திரையுலகில் ரஜினியுடன் பணி புரிந்தவர்கள்.

கமல்ஹாசன் தயாரிப்பில் 3 திரைப்படங்கள் – தெறிக்கவிடும் தர்ஷன்

பாஜகவிற்கு எதிராக ரஜினி எப்போதும் பேச மாட்டார். மாறாக மோடியின் திட்டங்கள் குறித்து பாராட்டியே பேசுவார். எனவேதான் அவர் இந்த விவகாரம் பற்றி வாய் திறக்க தயங்குகிறார் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.