Rajinikanth Reference in Karnan Movie

கர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா என புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Rajinikanth Reference in Karnan Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும திரைப்படம் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, லால், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேற்று 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் தனுஷ் திரைப்பயணத்தில் அசுரனை போல கர்ணன் முக்கிய இடத்தை பிடிக்கும் என கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி பட புகைப்படம் பொறிக்கப்பட்ட டீசர்ட் அணிந்து இருப்பார். இதனை பார்த்த தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.