100 பாட்ஷாவுக்கு சமமான ‘கூலி’ படம் ரிலீஸ் பற்றிய அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது.
அன்று, தமிழகத்தில் இருப்பவர்களுக்கு முன்பு கேரளா மற்றும் கர்நாடாகவில் இருக்கும் ரசிகர்கள் ‘கூலி’ படத்தை பார்த்துவிடுவார்கள். கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. கேரளாவில் ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 2023-ம் ஆண்டு ‘துணிவு’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த அஜித் குமார் ரசிகர் இறந்ததை அடுத்தே அதிகாலை காட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது மாநில அரசு. அதன் பிறகே முதல் காட்சி 9 மணிக்கு என்று முடிவானது.
ரஜினிகாந்த் நடிக்க வந்து 50 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கூலி படத்தில் ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு டைட்டில் கார்டை போடுகிறார் லோகேஷ் கனகராஜ் என தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் ரசிகராக லோகேஷ் இருந்தாலும், தலைவருக்காக இப்படியொரு விஷயம் செய்ததற்கு நன்றி என லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
‘கூலி’ படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இதுவரை லோகேஷ் எதுவுமே சொல்லவில்லை. அப்படி இருந்துமே ரஜினிகாந்த் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு ஒரு வகையில் காரணமாகிவிட்டார் நாகர்ஜுனா.
அதாவது ‘கூலி’ படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்று அவர் சொன்னதை பிடித்துக் கொண்டார்கள் ரசிகர்கள். ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா.
கதாபாத்திரம் குறித்து கேள்விப்பட்டதும், இது ரஜினி சாருக்கு தெரியும் தானே என்று லோகேஷ் கனகராஜிடம் வியந்து கேட்டிருக்கிறார். ரஜினி சாருக்கு உங்கள் கதாபாத்திரம் பற்றி தெரியும் என லோகேஷ் சொன்னதை கேட்டு இம்பிரஸ்ஸாகி விட்டார் நாகர்ஜுனா. மேலும், படத்தில் 15 நிமிடமே வரும் அமீர்கான் ரோலும் செம மிரட்டலாக தெறிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
