Web Ads

கூலி-குட் பேட் அக்லி: ரஜினி, அஜித் படங்கள் மோதலில் எது முந்தும்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் படமும், ‘தல’ படமும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இதோ மீண்டும் மோத இருக்கின்றன. இது குறித்த தகவல்கள் பார்ப்போம். வாங்க..

‘தல’ அஜித்தின் ரசிகர் தீபக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

படத்தை, வருகிற 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும், அன்று அஜித்தின் பிறந்த நாளும் வருவதால் குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமையும் என கூறப்படுகிறது.

இதனிடையே, குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக, தற்போது ரஜினிகாந்தின் ‘கூலி’ படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

மே 1-ம் தேதி அரசு விடுமுறை. அதுமட்டுமின்றி வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால் அப்போது வெளியிட்டால், நல்ல கலெக்‌ஷனும் வரும் என அப்போது ரிலீஸ் செய்யும் ஆலோசனையில் படக்குழு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும் நேருக்கு நேர் மோதின. அதில், விஸ்வாசம் படம் முன்னிலை பெற்றது.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள கூலி- குட் பேட் அக்லி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் மோதலில், யார் வெற்றிபெறுவார்கள்? என ரசிகர்களின் ஆவல் அதிகரித்துள்ளது.

பொதுவாக, இரண்டுமே செம கமர்ஷியல் படங்கள் என்ற வகையிலும், ஸ்டார் அந்தஸ்து இருப்பதாலும் கலெக்‌ஷனுக்கு குறையிருக்காது என நம்பலாம்.!