பறவை படும் பாடு: ஆம், ‘கங்குவா’ வரும் நாளில் ‘பீனிக்ஸ்’ வராது..
அந்த ‘கங்குவா’ பறவை வரும் நாளில், இந்த பீனிக்ஸ் பறக்காதாம். அதாவது விஷயம் என்னன்னா..
சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபீனிக்ஸ் வீழான்.
இப்படம், நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தை விளம்பரம் செய்யும் வகையில் பேட்டிகள் கொடுத்து வந்தார் சூர்யா சேதுபதி.
இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் கங்குவா எனும் பிரம்மாண்டமான படம் ரிலீஸாகும் அதே நாளில், ஃபீனிக்ஸ் வீழான் படத்தை ரிலீஸ் செய்யலாமா?. கங்குவா முன்பு ஃபீனிக்ஸ் வீழான் எடுபடுமா? ரசிகர்களை கவருமா? எப்படி விஜய் சேதுபதி இந்த ரிலீஸுக்கு ஒப்புக் கொண்டார் என சினிமா ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.
இந்நிலையில், திட்டமிட்டபடி நவம்பர் 14-ம் தேதி ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படம் ரிலீஸாகாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
‘பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஃபீனிக்ஸ் வீழான்’ ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாகாது.
சென்சார்டு போர்டு பரிந்துரை செய்த கட்ஸுகளால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களின் தொடர் ஆதரவு, புரிதல், பொறுமைக்கு நன்றி. ஃபீனிக்ஸ் வீழான் முன்பை விட ஸ்டிராங்காக வருவார் என்றும், அப்படி வரும்போது வேற லெவலில் இருக்கும் என்றும் உறுதி அளிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அறிமுக ஹீரோ சூர்யா சேதுபதி பேசும்போது, அப்பா எனக்கு தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணியாக தருவார். அதனால், சினிமாவில் வந்து சாதிக்க முடிவு செய்தேன்’ என சூர்யா சேதுபதி சொன்னது பெரும் சர்ச்சையானது.
சராசரியாக ஒரு மனிதர் வாங்கும் சம்பளத்தையே, தன் பாக்கெட் மணியாக வாங்கிக் கொண்டு கஷ்டப்படுவதாக நசொல்வதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது என்றும், வளர்ப்பு சரியில்லை, கஷ்டம் உணராமல் ஏதோ வாரிசாக வந்து பிதற்றுபவர், என்றெல்லாம் வலைதளவாசிகள் தெரிவித்தார்கள்.
இதற்கு, சூர்யா சேதுபதி ‘ நான் அப்படி பேசவில்லை. தவறாக செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது’ என கூறியுள்ளார். எப்படியோ, தன்னிலை உணர்ந்தால் நன்னிலை தான்.!