கங்குவா பிரஸ் மீட்டிங்கில் நடிகர் சூர்யா கேட்ட மன்னிப்பு: எதற்கு தெரியுமா?
இந்திய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய படம் கங்குவா. தற்போது இப்படம் ரிலீஸ் சம்பந்தமான பரபரப்பான சூழ்நிலையில் பிரஸ் மீட்டிங்கில் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் சூர்யா. இது குறித்த விவரம் காண்போம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா.
இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு நாளை வெளியாகவுள்ளது.
ரூ.2000 கோடி வரை கலெக்ஷன் ஆகும் என தயாரிப்பாளர் தெரிவிக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏற்கனவே புரோமோசன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட மெட்ரோ நகரங்களில், சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்பினை படக்குழு நடத்தி வருகின்றது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுவதாக அறிவித்த நேரத்திலிருந்து, படக்குழு தாமதமாகவே வந்துள்ளது. ஆனால், படக்குழு அறிவித்த நேரத்தில் செய்தியாளர்கள் சென்றுவிட்டனர். இதனால், செய்தியாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால், கோபமான பத்திரிகையாளர் ஒருவர், சூர்யாவை இடைமறித்து, தனது கையில் கட்டியுள்ள வாட்சைக் காட்டி, எத்தனை மணிக்கு செய்தியாளர் சந்திப்பு எனக் கூறினீர்கள்? இப்போது எவ்வளவு நேரம் ஆகியுள்ளது? நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது? உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.
உடனே சூர்யாவோ, மற்ற இடங்களுக்குச் சென்று வருவதில் தாமதமாகி விட்டது எனக்கூறி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்னதாக, இப்படத்தின் ‘மன்னிப்பு’ ஸாங் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.