Rajamouli

Rajamouli : ரஜினியா? கமலா? யாருடன் இணைய ஆசை என பேட்டி ஒன்றில் அதிரடியாக பதிலளித்துள்ளார். அது யார் தெரியுமா?

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜமௌலி. இவர் தற்போது ராம் சரண், என்.டி.ஆர் ஆகியோரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி Koffee With Karan என்ற பெயரில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது இவரிடம் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல் ஹாசன் ஆகியோரில் யாரை இயக்க ஆசைப்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ராஜமௌலி சற்றும் யோசிக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பதிலளித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் வெளியாகி இருந்த பாகுபலி படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியின் பதிலை கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இது உண்மையில் நடந்தால் சூப்பராக இருக்கும் என கருத்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.