5 லட்சம் ரூபாய் பணம் திருடு போன நிலையில் சரவணன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Raja Rani2 Episode Update 24.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவும் சரவணனும் ரூமில் பேசிக் கொண்டிருக்கின்றனர். வியாபாரம் பண்றேன் நீங்க இதுக்கு முன்னாடியே இதுமாதிரி பணத்தை கட்டு கட்டா பார்த்திருப்பீங்க என சந்தியா சொல்ல சரவணன் தொழிலை நடத்துவது எப்படி என்பது குறித்து கூறுகிறார். பிறகு இருவரும் தூங்கி விடுகின்றனர்.

திருட்டு போன ஐந்து லட்சம் ரூபாய்.‌. சரவணன் எடுத்த முடிவால் அதிர்ச்சியான சிவகாமி, சிக்கப் போவது யார் தெரியுமா? - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

சிவகாமி திடீரென்று தூக்கத்திலிருந்து ஏதோ இருட்டில் தன்னந்தனியா யாரோ ஒருவர் நிற்பது போல இருக்கிறது என எழுந்து கொள்கிறார். பிறகு அவருடைய கணவர் அவருக்கு தண்ணீர் கொடுத்து தூங்க வைக்கிறார். இந்த நேரத்தில் சந்தியா சரவணன் ரூமில் பீரோவில் இருந்து யாரோ வருவது போல காட்டப்படுகிறது.

பிறகு மறுநாள் காலையில் சந்தியா ரூமில் ரெடி ஆகிக் கொண்டிருக்க அப்போது வந்த சரவணன் அவரை ஓரமாக நின்று சைட் அடிக்கிறார். பிறகு இருவருக்கும் இடையே கொஞ்சம் ரொமான்ஸ் நடக்கிறது. பிறகு பணத்தை எடுங்க பேங்கில் போட்டு விடலாம் என சரவணன் சொல்ல சந்தியா பீரோவில் தேட பணம் காணவில்லை. உடனே அதை சரவணனிடம் சொல்ல இருவரும் சேர்ந்து தேடியும் பணம் கிடைக்காததால் ஆக்ரோஷமான சரவணன் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் கூடிய நிலையில் பணத்தை காணும் அர்ச்சனா நீ எடுத்தியா? ஆதி நீ எடுத்தியா? என ஒவ்வொருவராக கேட்கிறார்.

பிறகு சிவகாமியிடம் இந்த விஷயத்தை சொல்ல அவரும் பதறி போய் ஒவ்வொருவராக அனைவரிடமும் கேட்கிறார். பிறகு எல்லோரையும் அவரது ரூமில் சென்று இடத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் அர்ச்சனா இரவு நேரத்தில் சந்தியா சரவணன் ரூமுக்கு சென்று பணத்தை திருட பீரோவைத் திறந்து பார்த்தபோது அங்கு பணம் இல்லையே பிறகு வேறு யார் எடுத்திருப்பார்கள் என யோசிக்கிறார். சரவணன் போலீசில் புகார் அளித்து விடலாம் அதுதான் சரியான வழி என கூறுகிறார். அர்ச்சனாவும் ஆதியும் அதிர்ச்சி அடைகின்றனர்.

திருட்டு போன ஐந்து லட்சம் ரூபாய்.‌. சரவணன் எடுத்த முடிவால் அதிர்ச்சியான சிவகாமி, சிக்கப் போவது யார் தெரியுமா? - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

சிவகாமி தன்னை போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றதை நினைத்து பார்த்து போலீஸ் எல்லாம் வேண்டாம் கொஞ்சம் பொறுமையா இரு சரவணா என தடுத்து நிறுத்துகிறார். செந்தில் சந்தியா ஆகியோர் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பது தான் சரி என கூறுகின்றனர். இன்னைக்கு ஒரே ஒரு நாள் பொறுத்துக்கோ பணம் கிடைக்கலன்னா போலீசுக்கு போறது மட்டும் இல்ல அதுக்கு மேலயும் நான் போவேன் என கூறுகிறார். எல்லாருக்கும் இன்னிக்கு ஒரு நாள் டைம் பணத்தை எடுத்து அவங்க இன்னைக்கு நைட்டு இந்த டேபிள் மேலே எடுத்து வந்து வச்சுடுங்க. இல்லைனா நடக்குறதே வேற என கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.

அதன்பிறகு ஆதி சந்தியா சரவணன் ரூமிற்குள் சென்று பணத்தை திருடியதை நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது. பணத்தைத் திருடிய ஆதி அதை திருப்பி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.