ப்ளைட் டிக்கெட்டை திருடி அர்ச்சனா செய்த வேலையால் குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

Raja Rani2 Episode Update 17.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன், சக்கரை மற்றும் செல்வம் ஆகியோர் கடையில் இருக்கும்போது சந்தியா அங்கு வருகிறார். அப்போது செல்வம் சந்தியாவை யார் என்று தெரியாத காரணத்தினால் கடைக்கு வந்தவர் என நினைத்துக் கொண்டு வாங்க எண்ண வேண்டும் பக்கோடா சூப்பராக இருக்கும் சாப்பிட்டு பாருங்க என கொடுக்கிறார். மேலும் இவர் தான் கடையோட ஓனர். சென்னையில் நடக்க போற சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார். தென்காசியிலேயே இவர்தான் பெரிய சமையல்காரர் என புகழ்ந்து பேசுகிறார். சந்தியாவும் அப்படியே செல்வத்தை கலாய்க்கிறார். பிறகுதான் சரவணன் இவர் என்னுடைய மனைவி சந்தியா என கூற செல்வம் மன்னிப்பு கேட்கிறார்.

இந்தியா-நியூசிலாந்து மோதல் : கேன் வில்லியம்சன் விலகல்.. புதிய கேப்டனாக டிம் சவுதி..

பிறகு சந்தியா சரவணனை அழைத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என வெளியே கிளம்புகிறார். அதன்பிறகு செல்வம் சர்க்கரையுடன் வீட்டில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் அவர்களின் பெயர் என்ன என கேட்டு தெரிந்து கொள்கிறார். ‌அதன்பிறகு அர்ச்சனா கடைக்கு போன் செய்து பழைய பேப்பர்காரன் வந்தா வர சொல்லு என சொல்கிறார். செல்வமும் சரி என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

இந்தப் பக்கம் சந்தியா சரவணனை அழைத்துக்கொண்டு ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் மற்றும் ஷூ ஆகியவற்றை வாங்குகிறார். செல்வம் அர்ச்சனா சொன்னபடி பழைய பேப்பர்காரன் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். சிவகாமி வெளியே வந்து பார்க்க அர்ச்சனா அண்ணிதான் அழைத்துவரச் சொன்னதாக கூறுகிறார் செல்வம். பிறகு சிவகாமி பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை எடைக்கு போடுகிறார். இந்த நேரத்தில் வந்த அர்ச்சனா சிவகாமியிடம் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க போங்க என அனுப்பி வைக்கிறார். மயிலை வேறு ஏதாவது இருக்கா என எடுத்து வா என அனுப்பி வைக்கிறார். செல்வத்தை ஏற்கனவே சிவகாமி கடைக்கு அனுப்பி விட்டார்.

Cooku With Comali புகழாக பார்க்காதீங்க – Santhanam வேண்டுகோள்..! 

இந்த நேரத்தில் அர்ச்சனா ப்ளைட் டிக்கெட்டை எடுத்து வந்து பழைய பேப்பர்காரனிடம் போட்டு விடுகிறார். சரியாக இந்த சமயத்தில் சந்தியா வந்ததும் அதனை எடுத்து மறைத்து விடுகிறார் அர்ச்சனா. ஆனாலும் சந்தியா இதனைக் கண்டு பிடிக்கவில்லை. பிறகு ப்ளைட் டிக்கெட்டை யில் சேர்த்து போட்டு பழைய பேப்பர் காரரையும் அனுப்பி வைத்துவிட்டு சந்தோஷப்படுகிறார் அர்ச்சனா. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.