படத்திற்குப் போய் வசமாக மாட்டியுள்ளார் அர்ச்சனா.

Raja Rani 2 Episode Update 29.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் என்பதால் கடைக்கு சென்ற அவர் தன்னுடைய கணவரை அழைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக படத்திற்கு சென்றார். அங்கு ஐஸ் கிரீமை வாங்கி இருவரும் மாறிமாறி ஊட்டிக் கொண்டனர். இதனை அவருடைய மாமனார் பார்த்து விடுகிறார். ஆனால் தியேட்டரில் எதையும் கேட்காமல் சமோசா வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..

படத்திற்குப் போய் வசமாக மாட்டிய அர்ச்சனா.‌.. அடுத்து நடந்தது என்ன?? ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

வீட்டில் மயிலு துணியை துவைப்பதற்காக அனைவரது துணியையும் எடுத்து கொண்டு வந்து சிவகாமியிடம் காட்டுகிறார். அப்போது அவருடைய கணவர் பாக்கெட்டிலிருந்து சினிமா டிக்கெட் சிக்குகிறது. இதனையடுத்து செந்திலும் அர்ச்சனாவும் வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய கணவர் திருட்டுத்தனமாக சினிமாவுக்குச் சென்று வந்ததைப் பற்றி மறைமுகமாக திட்டுகிறார். தங்கள் இருவரும் சினிமாவுக்குச் சென்று வந்தது தெரிந்து விட்டதோ என பயப்படுகின்றனர். அதன் பின்னர் சிவகாமியின் கணவர் வர அவரை பிடித்து விடுகிறார். அப்பா சினிமாவுக்குச் சென்று விஷயம் தான் தெரிந்தது என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றனர்.

அசத்தலான சுவையில் Easy-யா செய்யலாம் மீன் வறுவல்

அவருடைய மாமனாரும் நீங்க தப்பிச்சுக்கங்க என அவர்கள் இருவரையும் சிக்காமல் தப்ப வைத்துவிடுகிறார். இன்னொருபுறம் சந்தியா சரவணன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் வெளியே செல்ல திட்டமிடுகின்றனர். முதலில் குடும்பத்துடன் சினிமாவுக்கு போகலாம் அதன் பின்னர் வெளியே எங்கே போகலாம் என சரவணன் கூறுகிறார். இதனால் சந்தியா மகிழ்ச்சி அடைகிறாள். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோடு.