அர்ச்சனா சந்தியாவை சிவகாமியிடம் கோர்த்து விட சந்தியா அடுக்கடுக்கான கேள்விகளால் சிவகாமியின் வாயை அடைத்துள்ளார்.

Raja Rani 2 Episode Update 28.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனாவும் சர்க்கரையும் டிபன் பாக்ஸ்க்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த நேரத்தில் சிவகாமி வந்துவிட பாக்ஸை தட்டி விட்டு பேப்பரை வெளியே வர வைக்கிறார் அர்ச்சனா.

அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அந்த இடத்தில் கூடினர். அர்ச்சனா அந்த கடிதத்தை எடுத்து சரவணன் எழுதியதையும் சரவணனுக்கு சந்தியா எழுதிய கடிதத்தையும் படிக்கிறார். சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்க சந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் எனக்கு விருப்பமென ஆசையாக எழுதியதை தவறாக புரிந்து கொண்டு சந்தியாவை திட்டுகிறார்.

கோர்த்து விட்ட அர்ச்சனா.. அடுக்கடுக்கான கேள்விகள் சிவகாமியை வாயடைக்க வைத்த சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

என் பிள்ளைகளுக்கு போட்டி போட்டினு மேடை மேடையாக திரிய தெரியாது. சரவணனுக்கு ஒரு விஷயம் புடிக்கலைன்னு சொன்னா அத அதோட விட்டுடணும் அவனை வற்புறுத்த கூடாது என கூறுகிறார். அவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டு தோத்துட்டா இந்த ஊரே அவனை கிண்டல் பண்ணும். அக்கம்பக்கத்தார் என்ன பேசுவாங்க. அவனோட வியாபாரம் அப்படியே முடங்கிப் போய்விடும். அந்தக் கடைதான் அவனோட உசுரே இதை யாராவது நெனச்சு பாத்தீங்களா என சிவகாமி கூறுகிறார்.

பிறகு சந்தியா அத்தை ஒரே நிமிஷம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் என கூறிவிட்டு அவருக்கு இந்த நிகழ்ச்சில கலந்துக்க தகுதி இருக்கா இல்லையா? அவர் கிட்ட திறமை இருக்கா இல்லையா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க என கூற சிவகாமி பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் நிற்கிறார். எது எப்படி இருந்தாலும் சரவணனுக்கு பிடிக்காததை நான் ஒத்துக்க மாட்டேன் என கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

பின்னர் தன்னுடைய மாமனாரிடம் சந்தியா அத்தையை சம்மதிக்க வைக்கனும் அதற்கு ஏதாவது திட்டம் போடணும் என இருவரும் திட்டம் போடலாம் என முடிவு செய்கின்றனர். பிறகு சிவகாமி கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்க அந்த நேரத்தில் ஒருவர் வீட்டிற்கு வந்து அர்ச்சனாவின் தங்கச்சியை தன்னுடைய மகனுக்கு கட்டி வைக்க பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம். அர்ச்சனாவை உங்க வீட்ல கட்டிக்கொடுத்து இருப்பதால் அவரோட தங்கச்சி பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் வந்தேன் என கூறுகிறார்.

சிவகாமி அர்ச்சனாவின் தங்கச்சி பற்றி ஆஹா ஓஹோ என கூறுகிறார். பிறகு சந்தோஷம் என அந்தப் பெண்மணி கிளம்பிவிடுவார். பார்வதி ஏன்மா இப்படி சொன்னிங்க என கேட்க அர்ச்சனா எவ்வளவு தப்பு பண்ணி இருக்கா நான் அவளைப் பத்தி எங்கேயும் பேசல. அவ பண்ணுது எல்லாமே தன் குடும்பத்திற்கு ஏதாவது பண்ணனும்னு தான். பிரியாவும் ஒரு பொண்ணுதான் அவளுக்கும் நல்ல இடத்தில் வரன் அமையணும்னு தான் அப்படி பேசினேன் என கூறுகிறார். பிறகு சிவகாமி கோவிலுக்கு கிளம்ப உடனே சந்தியா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என மாமாவிடம் கூறிவிட்டு நேராக கடைக்குச் சென்று சர்க்கரையை அழைத்து வருகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.