சரவணன் வீட்டில் வெடித்துள்ள பூகம்பத்தால் குடும்பத்தார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Raja Rani 2 Episode Update 22.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் சரவணனின் அப்பா அம்மா ஆகியோர் ப்ளைட்டில் பறக்க போவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டார் வந்து குழு ஆரம்பிக்க இருப்பதாக சொன்ன அவர்களிடம் ப்ளைட்டில் போவது பற்றி பெருமையாக கூறுகிறார். அப்போது அவர்கள் ப்ளைட் டிக்கெட்டை பார்க்க ஆசைப் பட்டதால் சிவகாமி அதை கொண்டு வந்து காட்டுமாறு பார்வதியிடம் கூறுகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

பார்வதி உள்ளே சென்று பீரோவில் தேட பிளைட் டிக்கெட் மற்றும் அந்த இன்விடேஷன் ஆகியவை காணவில்லை. அதை வந்து பார்வதி வெளியே சொல்ல சந்தியா சரவணன் உள்ளிட்டோர் சேர்ந்து தேடுகின்றனர். இதனால் அர்ச்சனா மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒவ்வொரு எவ்வளவு தேடியும் அவரை காணவில்லை. அக்கம்பக்கத்தார் சிவகாமியை கிண்டல் அடித்து விட்டு வீட்டிற்கு கிளம்புகின்றனர்.

மானம் மரியாதை எல்லாம் போச்சு என சிவகாமி புலம்புகிறார். ரொம்ப நாளைக்கு பிறகு என் புள்ள முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன். ஆனா அவ இப்போ போட்டியில் கலந்துக்க முடியாத மாதிரி ஆகிடுச்சு என வருத்தப்படுகிறார். பார்வதி பழைய பேப்பர்காரன் கிட்ட டிக்கெட் போயிட்டு இருக்குமோ என சொல்ல உடனே அர்ச்சனா ரூட்டை மாற்றி விடலாமே என எல்லாரும் போய் தேடுங்க, தேடுங்க என கலைத்து விடுகிறார். ஆனால் ஆதிக்கு அண்ணி ஓவரா பர்பாமன்ஸ் பண்றாங்களே என சந்தேகம் வருகிறது.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech 

இதனையடுத்து சந்தியா கோயில் அருகில் அமர்ந்து இது பற்றி யோசித்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த சரவணன் எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் என்பது வேண்டும். அது எனக்கு இல்லை எனக்கூறி வருத்தப்படுகிறார். சந்தியா உடனே அந்த போட்டி குழுவினர் இடமே பேசிப் பார்க்கலாம் என அவர்களுக்கு போன் செய்கிறார்.

அவர்களிடம் பேச அவர்கள் எந்தவித உதவியும் செய்ய முடியாது என கைவிரித்து விடுகின்றனர். இன்விடேஷன் இருந்தால் போட்டிக்கு வாங்க. ஏற்கனவே சரவணனுக்கு நிறைய சலுகைகள் கொடுப்பதாக போட்டியாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என கூறி விடுகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.