முகத்துக்கு நேராக சவால் விடுத்துள்ளார் அர்ச்சனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சந்தியா.

Raja Rani 2 Episode Update 22.04.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சரவணன் சந்தியாவும் ரூமுக்குள் மாறி மாறி பால் குடித்துவிட்டு சரவணன் போய் படிங்க என சந்தியாவை அனுப்பி வைத்தனர்.

முகத்துக்கு நேராக சவால் விட்ட அர்ச்சனா, பதிலடி கொடுத்த சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

மறுநாள் காலையில் சிவகாமி சந்தியா வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்க சந்தியா கதவைத்திறந்து வெளியே வருகிறார். சொம்பில் பால் மொத்தமாக காலியாகி இருப்பதைப் பார்த்து சந்தியாவை கட்டியணைத்து முத்தமிட்டு இது போல நீயும் சரவணனும் என்னைக்கும் சந்தோஷமாக இருக்கனும் என கூறுகிறார்.

அர்ச்சனா இது சந்தியா அப்படி என்ன பண்ணா எல்லாரும் அவளை தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க இன்னும் குழந்தை பிறந்து விட்டால் அவ்வளவு தான் அவளுக்கு குழந்தை பிறக்கக்கூடாது என்ன செய்யலாம் என யோசிக்கிறார். பிறகு செந்தில் வர எனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டு யோசிக்கிறார். சாமியாரிடம் சொல்லி மருந்து வாங்கலாம் என ஐடியா வர தூங்குவது போல நடிப்பதை மறந்து எழுந்து சக்சஸ் என கத்துகிறார். பிறகு செந்தில் என்ன எது எனக் கேட்க சாமியாரிடம் மருந்து வாங்க வேண்டும் அதுதான் யோசித்து இருந்தேன் என கூறுகிறார்.

முகத்துக்கு நேராக சவால் விட்ட அர்ச்சனா, பதிலடி கொடுத்த சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அதன் பிறகு ஒரு இடத்தில் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த செந்தில் என்ன யோசனை கேட்க உங்க அம்மா உங்க கிட்ட பார்வதி கல்யாணத்துக்கு உணவு கேட்கிறார்கள், சரவணன் தானே சொன்னாரு அவர்கிட்ட வாங்கிக்க வேண்டியதுதானே என கூறுகிறார். பிறகு செந்தில் அர்ச்சனாவை திட்டி விடுகிறார்.

அதன்பிறகு சந்தியா சமையலறை இருக்க அங்கே வந்த அர்ச்சனா இவரை குழந்தை பெத்துக்க அது ஒன்றும் அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை கரு உருவாகி பிரச்சனையில்லை ஆனால் அது உருவாக கஷ்டப்படணும். சொன்ன பிறகு சந்தியா நீ என்ன தான் சொல்றன்னு தெரியும் என கூறுகிறார்.

பிறகு உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் உண்மைய சொல்லு என கூறிவிட்டு நீ இன்னமும் விக்கி கிட்ட பேசிட்டு தானே இருக்க என கேட்கிறார். எந்த விக்கி என்ன என அர்ச்சனா மழுப்புகிறார். பிறகு சந்தியா பார்வதி ஓட கல்யாணத்தை நிறுத்த ஏதாவது திட்டம் இருந்தால் அத அப்படியே தூக்கி போட்டுட்டு. பார்வதியுடன் கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சந்தியா அர்ச்சனா விக்கி சும்மா இருக்க மாட்டான் கண்டிப்பா எதையாவது செய்து கல்யாணத்த நிறுத்துவான் அவன் பண பலம், படை பலம், அரசியல் பலம் என எல்லாம் இருக்கிறது என்று கூறுகிறார். கல்யாணம் நின்னு போனா அதுக்கு நான்தான் காரணம்னு பழியைத் தூக்கி என் மேல மட்டும் போடாதீர்கள் என கூறுகிறார். இப்படி ஒருவரையொருவர் மாறி மாறி முகத்துக்கு நேராக சவால் விட்டுக் கொள்ள இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.