பாரதியிடம் செல்வம் சொன்ன வார்த்தை ஒரு பக்கம் இருக்க போன் கால் ஒன்றால் மொத்த குடும்பமும் பதறியுள்ளது.

Raja Rani 2 Episode Update 18.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் பார்வதி காணாமல் குடும்பம் மொத்தமும் பதறிப் போய் இருக்க சந்தியாவும் சரவணனும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வந்ததும் என்னாச்சு என விசாரிக்கின்றனர். பிறகு போலீஸ் போன் செய்து கருணாகரனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தான் தெரிகிறது என சொல்ல சந்தியா போலீஸ் சொன்னாலும் நம்ப வேண்டாம் நாம ஒரு முறை உறுதி செய்து கொள்வோம் என கூறுகிறார்.

பார்வதியிடம் செல்வம் சொன்ன வார்த்தை.. கடைசியில் மொத்த குடும்பத்தாருக்கும் காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தமிழில் போலீஸ் சரவணனிடம் கடைசியாக பார்வதியின் செல்போன் உங்க கடையின் முன்பு தான் ஆப் ஆகி இருக்கிறது அதன் பிறகுதான் அவரை காணவில்லை என கூறுகின்றனர்.

பிறகு பார்வதியை கடத்திக் கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் கண் விழித்ததும் செல்வம் உன்னை வைத்துதான் உங்களது காரியத்தை சாதிக்க போகிறோம் இந்த திருவிழாவில் உன் உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டி மனித வெடிகுண்டாக அனுப்பி வைக்கப் போகிறோம். உங்களுடைய இந்த தியாகத்தை எங்களுடைய இயக்கம் கடைசிவரை போற்றும் என கூறுகிறார். நீ நினைக்கறது எதுவும் நடக்காது என்ற அண்ணா அண்ணி உன்னை சும்மா விட மாட்டாங்க என சொல்ல செல்வம் யார் இங்கே வந்தாலும் அவங்க கொலைதான் என கூறுகிறார்.

பல இடங்களில் தேடிய சிவகாமி மனம் உடைந்துபோய் வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு பாஸ்கர் வீட்டில் பார்வதி பற்றி கேட்க நான் என்ன சொல்வது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல என கதறி அழுகிறார். இந்த நேரத்தில் ஒரு போன் கால் வரை பாஸ்கர் ஓடிச்சென்று எடுக்கிறார். கவர்மெண்ட் மருத்துவமனைக்கு வருமாறு போனில் சொல்ல குடும்பமே பதறிப் போகின்றனர். பாஸ்கர் கதறி அழ சிவகாமி என் பொண்ணுக்கு எண்ணமோ நடந்து போச்சு என அறிகிறார். உடனே சந்தியா கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்க, போன்ல என்ன சொன்னாங்க மருத்துவமனைக்கு வர தான் சொன்னாங்க வேற எதுவும் சொல்லலையே என சமாதானம் செய்கிறார்.

பார்வதியிடம் செல்வம் சொன்ன வார்த்தை.. கடைசியில் மொத்த குடும்பத்தாருக்கும் காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பார்வதிக்கு எதுவும் ஆகாது என நம்ப வேண்டும் அப்போதுதான் அவள் நல்லபடியாக இருப்பாள் என கூறுகிறார். பிறகு சந்தியா வாங்க நீங்களும் நானும் மருத்துவமனைக்கு போயிட்டு வரலாம் என சொல்ல பாஸ்கர் நானும் வருகிறேன் என கூறுகிறார். இப்போதிருக்கும் மனநிலையில் நீங்க வர வேண்டாம் என சந்தியா சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.