சந்தியாவுக்கு போட்டியாக சிவகாமி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சிவகாமி சந்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு வந்த சரவணன் நீங்க கிளம்புங்க என சொல்லி சந்தியாவை வேலைக்கு அனுப்பி வைத்து விட பிறகு சரவணன் வேலைக்கு கிளம்ப வண்டி ஸ்டார்ட் ஆகாத காரணத்தினால் தள்ளி கொண்டு செல்கிறார்.

இந்த நேரத்தில் அங்கு வரும் பக்கத்து வீட்டு கவிதா என்ன சிவகாசி சந்தியா மட்டும் கார்ல ஜம்முன்னு பறக்கறா, சரவணன் இன்னமும் இந்த ஓட்ட வேண்டிய வச்சுக்கிட்டு தள்ளிக்கிட்டு போறான் அவனுக்கு ஒரு நல்ல வண்டியா வாங்கித் தரலாம்ல என சொல்ல சிவகாமி அவனுக்கு இப்பதான் சுக்கிர திசை ஆரம்பிச்சிருக்கு சீக்கிரம் கார் வாங்கி விடுவோம் என சொல்லி சமாளித்து அனுப்புகிறாள்.

அதன் பிறகு ஆதியிடம் ஒரு கார் விலை என்ன இருக்கும் என விசாரித்து சரவணனுக்கு ஒரு கார் வாங்கி தரப் போவதாக கூறுகிறார். உடனே அதற்காக நகைக்கடைக்கு சென்று தன்னுடைய நகையை விற்று மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வரும்போது கவிதாவின் அடியாள் ஒருவன் பணத்தை கொள்ளை அடித்து விடுகிறான்.

மறுபக்கம் சந்தியா எஸ்பிஐ சந்திக்கச் செல்லும்போது அவர் கத்தி கணேசன் என்ற ரவுடியை என்கவுண்டர் செய்வதற்கான அசைன்மென்ட் கொடுக்க சந்தியா என்கவுண்டர் எல்லாம் வேண்டாம் ஒரு உயிரை எடுக்க நாம யார் என பேச எஸ்பி சொன்னதை செய்யுங்க என சொல்லி கிளம்புகிறார்.

இந்த பக்கம் சிவகாமியிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்தவன் ஓடி வர அவனை கவிதா பிடித்து பணத்தை புடுங்க அவன் கையில் கிழித்து விட்டு ஓடுகிறான். அதன் பிறகு அந்த வழியாக சந்தியா வர சந்தியா சிவகாமி ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு கவிதாவை ஹாஸ்பிடலில் விடுவதற்காக தனது ஜீப்பில் ஏற்றி வர கவிதா காரில் என்கவுண்டர் ஃபைலை போட்டோ எடுத்து விடுகிறார்.

பிறகு ஸ்டேஷனுக்கு வந்த சந்தியா எஸ்பி-ஐ சந்தித்து என்கவுண்டர் எல்லாம் வேண்டாம், அவனை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி விடலாம் என பேச போவதாக கிளம்புகிறார். அதன் பிறகு ஆதி கள்ளப்பணத்தை பேங்கில் மாற்றிய விஷயம் தெரிந்து அவரை வேலையில் இருந்து தூக்குகின்றனர். மறுபக்கம் சிவகாமி கையில் பணத்துடன் சரவணன் போகும் விஷயத்தை சரவணனிடம் சொல்கிறாள். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.